ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, July 21, 2010

நீ ஒரு நடமாடும்..!

கருவைரக் கண்கள்…
கோமேதகக் கன்னங்கள்…
செம்பவழ உதடுகள்…
வெண் முத்துப் பற்கள்…
மரகதச் சிரிப்புகள்...
என நீ ஒரு நடமாடும்
நவரத்தின பெண்
'நகை'க் கூடம்..!
அதில் என் கவிதைகள்
நாட்டியமாடும்..!



11 comments:

சௌந்தர் said...

கவிதை அருமை

மோகனன் said...

நன்றி தோழரே...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமை .

மோகனன் said...

நன்றி நண்பா...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

திவ்யாஹரி said...

கவிதை நன்றாக உள்ளது. கல்யாணம் எப்போ நடந்தது? சொல்லவே இல்ல.

மோகனன் said...

வாங்க திவ்யா...

வாழ்த்திற்கு மிக்க நன்றி...

நாமென்ன ஊரறிந்த பிரபலமா என்ன..? அது நடந்து 5 வருடத்துக்கு மேல ஆச்சுதுங்க திவ்யா..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

கலா said...

கருவைரக் கண்கள்…
கோமேதகக் கன்னங்கள்…
செம்பவழ உதடுகள்…
வெண் முத்துப் பற்கள்…
மரகதச் சிரிப்புகள்... \\\\\\


இவ்வளவு கற்களின் பிரகாசத்துடன்
தேடி வந்தாலோ,கிடைத்தாலோ...

ஒரு சின்னச் சந்தேகச் சுத்தியலால்
அடித்து ,நொறுக்கித் தூள்,தூளாக்கும்{சில}
ஆண்களைப் பற்றி நீங்கள் என்ன
நினைக்கின்றீர்கள் நண்பரே!1??


கவிக்கு நகை அணிந்து
காட்டிப் பதித்த..
உவமை”கள்”
நீயும் “கல்” என்று
சொல்லாமல் சொல்கிறது

நன்றி மோகனன்

என்னோட இது வீட்டுக்காரம்மாக்கு
தெரிஞ்சா கொன்னேபுடுவா...\\\\\\\
திவ்யா...
ஐய்யாவுக்கு விரும்பம்தான் போலும்!!
ஆனால் அம்மாவுக்காகத்தான் பயப்படுகிறார்
போலும்!!
என்ன!
“மயில்” வா கனனோ....

மோகனன் said...

பொன்னகைக்காக மணம் செய்யும் ஆண்களை நான் ஆண்மகன்களாகக் கருதுவதில்லை கலா...

உண்மையான தன் பத்தினியை சந்தேகப் படும் ஆண்மகன், தன் தாயை சந்தேகப்படுவதற்குச் சமம் என நினைப்பவன் நான்...

கவி பற்றிய கருத்திற்கு நன்றிகள் பல தோழி...

ஓ... இதற்கு இப்படியும் பொருளாகுமல்லவா... மறந்து சொல்லி விட்டேன்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

(என்னாமா வாயாடுறாங்க.. நம்ம பொம்பளைக... ம்ம்ம்..!)

மோகனன் said...

நன்றி அபி...

கண்டீப்பாக வருகிறேன்... தங்களின் வருகைக்கு மிக்க நன்றி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

சசிகுமார் பாலகிருஸ்ணன் said...

ஒரு எழுத்துப்பிழை உங்களை எனக்கு அறிமுகப்படுத்தியுள்ளது நண்பரே.

எனது வலைப்பூ : www.tamilkavikal.blogspot.com

அருமையாகவுள்ளது. முழுமையாக வாசித்தபின் தொடர்கிறேன்.

மோகனன் said...

கண்டீப்பாக வருகிறேன்... தங்களின் வருகைக்கு மிக்க நன்றி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!