ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Monday, November 2, 2009

பொன்னாபரணங்களின்றி..!பொன்னாபரணங்களின்றி
எளிமையாக இருப்பதுதான்
உனக்குப் பிடிக்கும் என்றாய்..!
ஆயினும் பெண்ணே
உன் நெற்றியில் பூத்துள்ள
வியர்வைத் துளிகளனைத்தும்
வெண் முத்துக்கள் போன்றும்...
உன் இதழின் ஈரத்தில்
பட்டுத் தெறிக்கும் சூரிய ஒளி
வைரம் போன்றும் மின்னுகின்றனவே...
இந்த ஆபரணங்களை
நீ என்ன செய்யப் போகிறாய்..!No comments: