ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Thursday, November 19, 2009

கண்கள் பேசுமா..? - காதல் குறுங்கவிதைகள்..!


கண்கள் பேசுவதை
எங்கும் நான்
கண்டதில்லை பெண்ணே..!
உன் கண்களை
நான் சந்திக்கும் வரை..!

* * * * *


நான் உற்சாகம் இழந்து
வீழும் போதெல்லாம்
உன்னை நினைத்தாலே போதும் கண்ணே..!
எனக்குள் உற்சாகம்
தானாக வந்துவிடும்..!
என் உடலுக்குள் புது வேகம்
பிறந்து விடும்..!

* * * * *

பூமி தன்னைத்தானே
சுற்றியபடி
சூரியனையும் சுற்றிக்
கொண்டிருப்பது போல…
என் உடல் இங்கே சுற்றினாலும்
என் மனசு எப்பொழுதும்
உன்னைத்தான்
சுற்றிக் கொண்டிருக்கிறது..!

* * * * *

உன் நாவில்
தேனூறுகிறதா என்ன..?
நீ பேசுவதைக் கேட்டாலே
என் காதுகளிரண்டும்
இனிக்கின்றனவே..!

* * * * *

உன் பெற்றோர்களே உனை
ஒரு ஓவியமாய் தீட்டியிருக்கும் போது..!
கவிஞனான நான் உன்னைப் பற்றி
என் மனதிற்குள் பெருங்காவியமே
தீட்டி வைத்திருக்கிறேன்...
நீ வந்து படித்துப் பார்ப்பாய் என..!

* * * * *

ஒரு பூக்கூடையே
பூ வாங்க வருவது
போலிருக்கிறது..!
நீ... பூ வாங்க
வரும் அழகு..!

* * * * *
12 comments:

க.பாலாசி said...

படம் நல்லாருக்கு....

மோகனன் said...

வாங்க பாலாசி...

கவிதைகள் அப்படி ஒன்றும் சிறப்பாக இல்லை என்று மறைமுகமாக சுட்டுகிறீர்.. பரிந்து கொண்டேன்...

இனி அப்படி நிகழாமல் பார்த்துக் கொள்கிறேன்...


வருகைக்கும்... கருத்திற்கும் பணிவான நன்றிகள்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Tamilparks said...

உன்மையிலையே, தங்களின் கவிதை வரிகள் அனைத்தும் அருமையாக உள்ளது, மனதை புல்லரிக்கும் வண்ணம் செய்துவிட்டீர்கள் வாழ்த்துக்கள்

மோகனன் said...

தங்களின் வாழ்த்துகள்... எனது எழுத்துகளுக்கு கிடைத்த அங்கீகாரம் என்றே கருதுகிறேன்...

வாழ்த்துங்கள்.. வளர்கிறேன்...

வருகைக்கும்... கருத்திற்கும் பணிவான நன்றிகள்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Tamilparks said...

நன்றி

மோகனன் said...

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்...

நன்றிக்கும் உண்டோ நகைக்கும் தாழ்...

தங்களின் வருகைக்கும்... கருத்திற்கும் பணிவான நன்றிகள்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Sivaji Sankar said...

:) good job Mr.மோகனன்...

மோகனன் said...

அன்புத் தோழர் சிவாஜி சங்கர் அவர்களுக்கு...

தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் எனது பணிவான நன்றிகள்...

நீங்கள் பாராட்டும் அளவிற்கு நான் ஒன்றும் பெரிதாகச் செய்து விடவில்லை நண்பரே...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

பூங்கோதை said...

//உன் நாவில்
தேனூறுகிறதா என்ன..?
நீ பேசுவதைக் கேட்டாலே
என் காதுகளிரண்டும்
இனிக்கின்றனவே..! //
வரிகள் இனிக்கின்றன, வாழ்த்துக்கள்

மோகனன் said...

வாங்க பூங்கொத்தே... ஆங்... பூங்கோதை...

அட்டா... தங்கள் வாழ்த்துகள் அதை விட இனிக்கின்றனவே... இச்சுவையினை என்னென்று சொல்ல...

வருகைக்கும், வாசிப்பிற்கும்... வாகான வாழ்த்திற்கும் இந்த வறியவனின் வணக்கம் கலந்த நன்றிகள்...

அடிக்கடி சுவாசிக்க வாங்க..!

Unknown said...

ovvoru kavithaiyum azhugu, solla varthai illai, super superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

மோகனன் said...

நன்றி அனானி அவர்களே...