ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday, November 10, 2009

ஏனடா நீ..?

உன் அன்பிலே
என் அன்னையைக் கண்டேன்…
உன் அறிவுரையிலே
என் தந்தையைக் கண்டேன்…
உன் ஆறுதல் வார்த்தையில்
என் தோழனைக் கண்டேன்…
இப்படி எல்லாமுமாய் வந்தாயே…
ஏனடா நீ...
என்னவனாக
வராமல் போனாய்…?

     

(என் அன்பிற்குரியவள்... எனக்காக எழுதிய கவிதை...)
4 comments:

கலையரசன் said...

கவிதை நன்று! ஆனா.. அதிலுள்ள சோகம் என்னால ஏத்துக்க முடியலை.. ஏன்னா, என்னவள் பேரும் அதுதான்!!

மோகனன் said...

அன்பான கலையரசன்...

என்னவள் பெயர் வேறு... அவளுக்கு நான் இட்ட புனைப் பெயர் இது...

இது அவளுடைய சோகம்... காரணம் இங்கு வேண்டாமே... வேணும்னா மாத்திடறேன் என்னவளோட புனைப் பெயரை...

ஒரு நாள் அவளிடம் ஒரு கவிதை எழுதித் தரச் சொல்ல.. அவளுடைய சோகத்தை இப்படிக் கவிதையாய் எழுதிக் கொடுத்து விட்டாள்...

தமிழ்தோட்டம் said...

அருமையான உருக்கும் வரிகள்

மோகனன் said...

அன்பு நண்பர் யூஜின்...

தமிழ்த் தோட்டமே இங்கு வந்து வாழ்த்திகிறது எனில்... அதை தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம்...

வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் அன்பு கலந்த நன்றிகள்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க...