ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, November 18, 2009

அழகிய திருடிக்கு பரிசு..!என் தூக்கத்தை…
என் பசியை…
என் கனவுகளைத் திருடிய
அழகிய திருடியே...!
இவைகளைத்
திருடிய உனக்கு
என்னையே பரிசளிக்கிறேன்…
எனை ஏற்றுக் கொள்வாயா..?4 comments:

பூங்கோதை said...

அழகிய வரிகள் மனதைத் திருடுகின்றன
வாழ்த்துக்கள்

மோகனன் said...

பூங்கோதை அவர்களுக்கு அடியவனின் முதல் வணக்கம்...

எனது கவிதைகளை ரசித்து, என் வலைக்குடிலில் இணைந்த முதல் பெண் நீங்கள் என்பதில் எனக்கு பெருமையாக இருக்கிறது...

தங்களின் இணைப்பு, எனக்கு பெண்களே சேர்ந்து கொடுத்த பூங்கொத்து போலிருந்தது... அதற்கு எனது நன்றிகள்...

தங்களின் பூங்கொத்து போன்ற கருத்திற்கு... நன்றிகளையும், அடுத்து வரும் கவிதைகளையும் பரிசாக அளிக்கிறேன்...

எனது காதல் கவிப்பயணம் உங்களைப் போன்றோர்களின் ஆதரவால் நீளப்போகிறது...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க பூங்கொத்தே... ஆங்... பூங்கோதை...

Tamilparks said...

மிகவும் அருமையான கவிதை வரிகள் அனைத்தும் மனதை தொடுகிறது

மோகனன் said...

அன்பு நண்பருக்கு...

தங்களின் வார்த்தைகளும்... வாழ்த்துகளும் எனை மென்மேலும் எழுதத் தூண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை...

என்னவளுக்கு இவைகளெல்லாம் என்று மகுடங்களாகுமோ என்று எண்ணுகிறேன்...

வருகைக்கும், கருத்துரைக்கும் கனிவான நன்றிகள்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!