ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday, November 17, 2009

இல்லாதிருந்திருந்தால்..!பசி என்று ஒன்று மட்டும்
இல்லாதிருந்திருந்தால்
மானுட வாழ்வில்
தேடுதல்கள் என்பதே
இருந்திருக்காது…
மரணம் என்று ஒன்று மட்டும்
இல்லாதிருந்தால்
இம்மண்ணில்
மக்கள் தொகையும்
குறைந்திருக்காது...
உன் காதல் என்று ஒன்று மட்டும்
எனக்குஇல்லாதிருந்தால்
என் பிறப்பின் பயனும்
தெரிந்திருக்காது..!4 comments:

மிர்த்தன் பிரபு said...

கவிதைகள் அருமை! ஆனால்...


தமிழ்க் கவிதை என்பது தவறான துணை எழுத்தான 'க்' அதனை கொண்டுள்ளது!

தமிழ் கவிதைகள் என்பதே சரியானது! மன்னிக்கவும்!

கலையரசன் said...

எப்டிங்க இதெல்லாம்? ம்..

மோகனன் said...

அன்பு நண்பர் மிர்த்தன் பிரபு அவர்களுக்கு வணக்கம்...

//தமிழ்க் கவிதை என்பது தவறான துணை எழுத்தான 'க்' அதனை கொண்டுள்ளது!

தமிழ் கவிதைகள் என்பதே சரியானது! மன்னிக்கவும்!//

தங்களின் கருத்து ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான்...

இருப்பினும், பல்கலைக் கழகங்களில் தமிழ் துறை என்று குறிப்பிடுவதில்லை.. தமிழ்த்துறை என்றே குறிப்பிடுகின்றனர்...

உயர்திணைக்கு ஒற்றெழுத்து மிகும் என்பது இலக்கண விதி. எம் தமிழ் எனக்கு உயர்திணை (உயிர்) என்பதால் அதற்க்கு ஒற்றெழுத்து இட்டுள்ளேன்...

யாழ்பாணத் தமிழில் இதற்க்கு ஒற்றெழுத்து இடுவதில்லை என்று எனது தமிழ்ப் பேராசிரியர் திரு. நல்லதம்பி ஐயா உரைக்கக் கேட்டு, தெளிவு பெற்று இதை உங்களுக்கு எழுதுகிறேன்...

இதில் மன்னிப்பிற்கு இடமேது நண்பரே... கருத்துக்களை பகிர்ந்து கொள்வதால் அறிவு மட்டுமல்ல.. அன்பும் வளரும்...

அடிக்கடி (சி)வாசிக்க வாங்க...

மோகனன் said...

அட்டே... வாங்க கலையரசன்...

என் காதலியுடன் நானிருக்கும் போது, என் கவிதைகளை வாசித்து விட்டு என்னவள் சொன்ன அதே வார்த்தையை நீங்கள் இங்கு அட்சரம் பிசகாமல் அப்படியே சொல்லியுள்ளீர்கள் என்பதை எண்ணி மகிழ்கிறேன்...

கருத்திற்கு நன்றி...

(என்னவள் பெயரை என்னவளுக்காகவும், உமக்காகவும் மாத்திட்டோம்யா... கார்குழலி என்பது நான் அவளுக்கிட்ட புனைப்பெயர்.. அது வேண்டாம்... யாழினி எநன்றாக இருக்கிறது என்று விட்டாள்... அவள் பேச்சிற்கு மறுப்பேது...

உடனே மாற்றி விட்டேன்... இதை கவனித்தீரா..?)

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க...