ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Sunday, December 20, 2009

நீ இந்த உலகத்தில்..! - காதல் குறுங்கவிதைகள்நீ என்னருகில் இருக்கும் வரை
உலகத்தையே மறந்திருக்கிறேன்..!
நீ என்னை விட்டு்ப் பிரிந்து சென்றால்
இந்த உலகமே என்னை மறக்கும்படி
செய்து கொள்கிறேன்..!
ஏனடா எனக்கிந்த காதல் வேதனை..?

                        *** + ***
என் பெயரை
யார் உச்சரித்தாலும்
சட்டென்று திரும்பாத
என் மனது..?
உன் பெயரை
யார் உச்சரித்தாலும்
சட்டென்று திரும்பி விடுகிறது..!
 
                        *** + ***

கடற்கரையின் மணற்பரப்பில்
கவலையின்றி பேசிக் கொண்டிருக்கும்
காதலர்களைப் பர்க்கும் போதெல்லாம்
எனக்குள்ளும் அந்த ஆசை பிறக்குமடா..?
உன்னுடன் நானும்
இதுபோல் எப்போது
அமர்ந்து பேசப் போகிறேன் என்று..?

                               *** + ***
அன்பே..!
நீ இந்த உலகத்தில்
யாரோவாக இருக்கலாம்..!
ஆனால்
நீதான் எனக்கு
உலகமே..!   

                              *** + ***
காதலென்பது
பொதுவுடமை என்கிறார்களே..?
அது உண்மைதானடா..!
நீ என்பது நானானேன்…
நானென்பது நீயானாய்…
நம் இருவரும் சேர்ந்து 'நாம்' ஆனோம்..!
இதுதானே பொதுவுடமை..!

                             *** + ***
உயிரே..!
உன்னுடைய பிறந்த நாளை
என்னுடைய பிறந்தநாளாக நினைத்து
அனைவருக்கும் இனிப்பு
கொடுத்து மகிழ்கிறேன்..!
ஏனெனில்…
நீ எனக்காகப் பிறந்தவனாயிற்றே..!

                                        - மலர்விழி மோகனன்
                              *** + ***                           
6 comments:

சே.குமார் said...

//என் பெயரை
யார் உச்சரித்தாலும்
சட்டென்று திரும்பாத
என் மனது..?
உன் பெயரை
யார் உச்சரித்தாலும்
சட்டென்று திரும்பி விடுகிறது..!
//

நல்ல வரிகள்.

வாழ்த்துக்கள்... உனக்கில்லை நண்பா... அண்ணிக்கு..!

கண்டிப்பாக என் வாழ்த்தை அண்ணியிடம் கொண்டு செல்லவும்.

மோகனன் said...

அப்படியே சொல்லிடறேன் நண்பா...

உன்னுடைய வருகைக்கும், வாழ்த்திற்கும் என் அன்பு நன்றிகள்..

அடிக்கடி சுவாசிக்க வாங்க..!

kamalesh said...

வாழ்த்துக்கள்..

மோகனன் said...

வாங்க கமலேஷ்...

வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Viju said...

என் பெயரை
யார் உச்சரித்தாலும்
சட்டென்று திரும்பாத
என் மனது..?
உன் பெயரை
யார் உச்சரித்தாலும்
சட்டென்று திரும்பி விடுகிறது..!


arumai

மோகனன் said...

அன்பு நண்பர் விஜூ...

தங்களின் வாழ்த்திற்கும், வருகைக்கும், ரசனைக்கும் நன்றிகள் பற்பல

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!