ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Monday, December 28, 2009

கடைசி வரை உனக்காகவே..! - காதல் குறுங்கவிதைகள்


உலகிலேயே மிகவும்
அழகான கவிதை ஒன்று
சொல் என்றார்கள்..!
நான் உன் பெயரை மட்டும்தான்
சொன்னேன்..!
அதற்கே அசந்து விட்டார்கள்..!

                     *** + ***

குற்றமென்ன செய்தேன் கொடிமலரே
உன் இதயமெனும் சிறையில்
எனை அடைத்து வைத்திருக்கிறாய்..!
ஓ… உன் இதயத்தைத் திருடிய
குற்றத்திற்கான தண்டனையா அது.?   

                     *** + ***

அன்பே…
நீ ஒரு பெண் பிரம்மா..!
எப்படி என்கிறாயோ..?
கல்வி வாசமே இல்லாத
என்னைக் கூட
கவிஞனாக்கிவிட்டாயே..!   

                     *** + ***

காய்ந்து கிடந்த என் மனதில்
காதலை விதைத்து விட்டுச் சென்றவளே
எப்போது வந்து அதை
அறுவடை செய்யப்போகிறாய்
உனக்காக காத்திருக்கிறேன்..!

                     *** + ***

உன் புன்னகைக்குத்தான்
எவ்வளவு வலிமை..?
இரும்பான என் இதயத்தைக்கூட
எளிதில் உடைத்து விட்டதே..!
உன் மௌனத்திற்க்குத்தான்
எவ்வளவு வலிமை..?
பேச்சாளனான என்னைக் கூட
மௌனியாக்கி விட்டதே..!
அட.. இதற்குப் பெயர்தான் காதலா..?

                     *** + ***

காத்திருந்து கரம் பிடிப்பதுதான்
காதல் என்றாய்..!
ஆதலால்தான் அன்பே
கடைசி வரை உனக்காகவே
காத்திருக்கிறேன்..!

                     *** + ***



12 comments:

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

அழகான கவிதை

தர்ஷன் said...

ம்ம் அருமை

மோகனன் said...

அன்பு நண்பர் தமிழ் வெங்கட் அவர்களுக்கு...

தமிழே வந்து என் கவிதையினை வாழ்த்துகிறதென்றால் அதை விட பேறு வேறேது...


வருகைக்குமு, வாசிப்பிற்கும், அழகான கருத்திற்கும் அன்பு கலந்த நன்றிகள்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

அன்புத் தோழர் தர்ஷன் அவர்களுக்கு...

தங்களின் ரசனைக்கேற்ப என் கவி அமைந்தது கண்டு அகமகிழ்கிறேன்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

கமலேஷ் said...

கலக்குரிங்க...வாழ்த்துக்கள்...

மோகனன் said...

நன்றி தோழா...

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்..

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

sangu said...

தப்பா நினைக்காதீங்க...
கவிதைகள் எல்லாமே சுமார்தான்.

மோகனன் said...

வாங்க சங்கு நண்பரே...

அட இதில என்னங்க தப்பா நினைக்க இருக்கு...

உள்ளத்தில் உள்ளதை சொன்னதற்கு மிக்க நன்றி...

இனி தரமுள்ளவையாக எழுத முயற்சிக்கிறேன்...

//வாசித்ததமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...// என்றுதான் சொல்லி இருக்கிறேன்...

தங்கள் வருகைக்கும், வாசிப்பிற்கும். மேலான கருத்திற்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள் பற்பல...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

வித்யாசாகரின் எழுத்துப் பயணம் said...

வணக்கம் மோகனன்,

ஒரு கவிஞன் கொள்ள வேண்டிய நிறைய பேரிடமில்லாத நல்ல பண்பை கொண்டுள்ளீர்கள். அந்த பண்பே உங்களை உயர்த்துமெனக் கொண்டு மனதார வாழ்த்துகிறேன்.

உணர்வுகளை உணரச் செய்யும் கவிதைகள் தான் உங்களுடைய கவிதைகள் அத்தனையும். ஒரு கவிதை படிக்கையில் காட்சி இதுவென்று படிப்பவரை உணரச் செய்வதே எழுதுபவரின் திறன். எனினும்; கவிதைகளை புடம் போடும் விமர்சகர்களுக்கு வாசலை திறந்தே வைப்போம், எழுதுபவரை பக்குவப் படுத்துபவர்களே அவர்கள் தான். அதிலும் நண்பர் சங்கு போன்றவர்கள் கம்பீரமும் நேர்த்தியுமான உள்ளம் கொண்டவர்கள். தவறானவன் நேரம் பொருத்து கவிதைகளை படிக்கத் துணிய மாட்டான்.

நேரில் இந்த இடம் இப்படி மாற்றலாமேயென நிறைய சொல்லலாம், மடலில் அத்தனை முடியாத பட்சத்தில் எழுதுபவரை ஊக்குவிக்கும் நோக்கமே பெரிதெனப் படுகிறதெனக்கு.

நீங்கள் நிறைய எழுதுகிறீர்கள். எழுதுபவர்கள் தமிழுக்கான வரம். எழுத எழுத பட்டைதீட்டப் படலாம். எழுதுங்கள். இன்னும் உறுதியும் பலமும் கொண்டு நிறைய எழுதுங்கள். காலம் உங்கள் பெயரையும் தனக்குள் எழுதிக் கொள்ளும்.

பாராட்டுக்களுடன்..,

வித்யாசாகர்
குவைத்

மோகனன் said...

மிக்க நன்றி தோழரே...


நீண்ட நாள் கழிந்ந எனது பின்னட்டத்திற்கு மன்னிக்க வேண்டுகிறேன்... இன்றுதான் என் கண்ணில் பட்டது... மிக்க மகிழ்ச்சி...


அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Unknown said...

அனைத்தும் மிகச் சிறந்த கவிதைகள்...வாழ்த்துக்கள்

மோகனன் said...

நன்றி திரு ஆர் அவர்களே...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!