ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, December 4, 2009

நீ இல்லாத இரவுகளனைத்தும்..!குளிர்ச்சியான மார்கழி இரவு..!
வெண்பனி போர்த்திய
வெள்ளை நிலவு..!
நீல வானக் கானகத்தில்
பூத்துச் சிரிக்கும்
நட்சத்திரக் கூட்டங்கள்..!
உரசிச் செல்லும்
வெண் மேகக் குவியல்கள்..!
இரவில் மலரும்
அல்லி மலர்கள்… - என
எத்தனையோ ரசிப்பதற்கு
இருந்தாலும்..?
நீ இல்லாத இரவுகளனைத்தும்
எனக்கு கோடை வெயிலாகத்தான்
தோன்றுகிறது..!6 comments:

பூங்குன்றன்.வே said...

//நீ இல்லாத இரவுகளனைத்தும்
எனக்கு கோடை வெயிலாகத்தான்
தோன்றுகிறது..!
//

வாரே வாவ்.அருமை நண்பா.

மோகனன் said...

வாங்க பூங்குன்றன்...

தங்களின் ரசனைக்கேற்றாற் போல் என் கவி அமைந்திருப்பது கண்டு அகமகிழ்கிறேன்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க...

Imayavaramban said...

அண்பு நண்பரே -

உங்கள் படைப்பு அருமை! சரியான காதலர் போலவே!
நான் வலைப்பூ உலகிற்கு புதியவன். நான் ஒரு தொடர் கதையை என் வலைப்பூவில் எழுத அரம்பித்துளேன்.
அதை படித்து தங்கள் கருத்தை சொல்ல வேண்டுகிறேன். நன்றி

என் வலைப்பூ முகவரி: http://eluthuvathukarthick.wordpress.com/

சே.குமார் said...

நண்பர் மோகணனுக்கு

உமது கவி அருமை..!
உமது காதல் கவிதைகளில் நாளுக்கு நாள் குளிர்ச்சி கூடிக் கொண்டே போகிறது.
அருமையான வரிகள்..!
ஆழமான கற்பனை..!!

எமது வலைகளில் வலம் வருகிறீர்களா?

தோழமையுடன்,
சே.குமார்.

மோகனன் said...

அன்புத் தோழர் இமயவரம்பனுக்கு...

தங்களை தமிழ்க் கூறும் வலைப்பூ நல்லுலகம் வருக..வருக என வரவேற்கிறுது...

இமயமே நமக்கு எட்டும் தூரம்தான்... இனி கவலை எதற்கு... இது நமக்கான வெளி... பட்டைய கிளப்புங்க...

தங்களின் வாழ்த்திற்கும்.. வருகைக்கும் இதயம் நிறைந்த நன்றிகள் பல...

தங்களின் வேண்டுகளை செவ்வனே நிறைவேற்றுகிறேன்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க...

மோகனன் said...

அன்பு நண்பர் குமார் அவர்களுக்கு...

உம்மைப் போலுள்ள எனது நண்பரெல்லாம்
வெம்மை நிறை நாட்டில் வாழ்கையில்
கவிதையாகிலும் தங்களுக்கு குளிர்ச்சியை ஊட்டட்டும் என்ற நினைவில் எழுதுவதாக இருக்கலாம்... என்னவளின் இதயத்திற்கு என் கவிகள் அதிகம் பிடித்துப் போவதாலும் அந்த குளிர்ச்சி இருக்கலாம்...

உலா வருகையில் கண்டீப்பாக வந்த் விட்டுச் செல்லுகிறேன்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க...