ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Thursday, December 17, 2009

உன்னைத் தவிர அத்தனையும்..!


கண்ணிமை உறக்கத்தைக்
கவர்ந்து கொண்டதேன்..?
கன்னி மொழிப் பேச்சினிலே
எனைக் கவிழ்த்து விட்டதேன்..?
காலம் கடந்து என் கண்
முன்னே வந்து நின்றதேன்..?
காதலெனும் மாய வலையில்
எனை சிக்க வைத்ததேன்..?
உன் காந்தமெனும் கண்ணிலே
எனை சிறை பிடித்ததேன் பெண்ணே..?
வரமாட்டாய் எனத் தெரிந்தும்
உன் வரவிற்காகக்
காத்துக் கொண்டிருக்கிறேன்..!
தரமாட்டாய் எனத் தெரிந்தும்
உன் தாயன்பை
கேட்டுக் கொண்டிருக்கிறேன்..!
காலம் கடந்து வந்தாலும்
காதல் காதல்தானே..!
மறந்துவிடு எனை என்றாய்...
மறந்து விட்டேன்...
உன்னைத் தவிர அத்தனையும்..!
2 comments:

சே.குமார் said...

nanba,

tamil illai athanaal angliaththamil. ok.

nanba kavithai arumai (ezhuthiyathu iruvarakinum ennam ondruthan).

orumurai yalini moganan agiraai... marumurai malarvizhi moganan agiraai. kolampogirathu nanba. enintha kulappam.
enakku puriyavillai.

pls etharku thaniyaga mail anuppu.

மோகனன் said...

அன்பு நண்பா...

தமிழில்லை என்று இனி குறைபட்டுக் கொள்ளாதே...

http://www.google.com/transliterate/indic/Tamil

இந்த லிங்கை புக்மார்க செய்து கொள்... கூகிளுடையது.. ஆங்கிலத்தில் அடித்தால் அப்படியே தமிழில் கொண்டு வரும்...

குழப்பம் வேண்டாம்... மலர்விழி மோகனன் என்பது என்னவளின் பெயரில் நான் எழுதிய பெண்பாற் கவிதைகளாகும்...

யாழினி மோகனன் என்பது.. என்னவள் எழுதிய கவிதைகளாகும்.. ஆதலால்தான் இப்படி பிரித்துக் காட்டுகிறேன்...

உன் வாழ்த்திற்கு நன்றி... உண்மைதான் எங்கள் எண்ணம் என்றும் ஒன்றுதான்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க