ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, December 30, 2009

இந்த ஆசைகளெல்லாம்..!உன் அழகிய காது மடலைக்
கடிக்க ஆசை..!
உன் சங்குக் கழுத்தில்
இதழ் பதிக்க ஆசை..!
உன் வெண்டை விரலில்
மோதிரமிட ஆசை..!
உன் முத்தமிழ்ப் பேச்சில்
மூழ்கி விட ஆசை..!
இந்த ஆசைகளெல்லாம்
கரைவதற்குள்
என்னருகில் வந்து விடு அன்பே..!
இல்லையெனில்
என் ஆயுள் கரைந்து விடும்..!2 comments:

kamalesh said...

ரொம்ப நல்லா இருக்குங்க...
வாழ்த்துக்கள்....

மோகனன் said...

வணக்கம் தோழரே...

தங்களின் வருகைக்கும், மேலான வாழ்த்திற்கும்... ரசனைக்கும் எனது அன்பு கலந்த நன்றிகள்...

அடிக்கடி (சு)வாணிக்க வாங்க..!