ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, December 23, 2009

வாசலில் ஒரு வானத்து தேவதை..!அடுக்களையில் ஆராய்ந்தபடி
அவசரமாய்
சமையலறையில்
சமைத்துக் கொண்டிருந்தேன்...
அப்போது என் வீட்டுக்
கதவிற்கே வலிக்காமல்...
அக்கதவைத் தட்டும்
மெல்லிய ஓசை கேட்டது..?

உள்ளிருந்தபடியே
‘யாரென்று’ வினவினேன்..!
மறுபடியும்
அதே மெல்லியத் தட்டல்...
‘அட யாருங்கறேன்...’
என்றபடியே எட்டிப்பார்க்க முனைந்தேன்

அதற்குள்...
தேனினும் இனிய குரல் ஒன்று
’நான்தான்’ என்று
தேனமுத கானமாய் ஒலித்தது..!

எட்டிப் பார்த்தேன்..!
வாசலில் ஒரு வானத்து தேவதை..!
பார்த்த வினாடியில்
மூர்ச்சித்துப் போனேன்..!
அவளழகில் முயங்கிப் போனேன்..!

வெள்ளி நிறச் சேலை கட்டி
நீல வான வீதியிலே
துள்ளி வரும் வெண்ணிலவைப் போல்
எந்தன் பெண்ணிலவு
வெண்ணிறச் சேலை கட்டி
பொன்னிலவாய்
என் முன்னே வந்து நின்றது..!

அவளை அப்போதே
அள்ளிப் பருக ஆசை என்றாலும்
அவளழகைப் பார்த்த என் கண்கள்
இமை மூட மறுத்து திகைத்தன...
அவள் அழகில் மூழ்கித் திளைத்தன..!

‘வா என் தேவதையே...
உள்ளே வா...’ என அழைத்தேன்...
அவளும் தன் மெல்லியப்
பூப்பாதங்களை
பூமியிலே பதித்தபடி...
புன்னகையைப் பூவாய் உதிர்த்தபடி
உள்ளே வந்தாள்..!

அவள் அன்று கட்டியிருந்த
வெள்ளை நிறச் சேலையில்
என் மனதை கொள்ளையடித்தாள்..!
முல்லை மலர்ச் சிரிப்பில்
எனை மூழ்கடித்தாள்..!
முயலைப் போல் முறைத்துக் காட்டி
எனை மோகத்தில் சிக்க வைத்தாள்..!

கருங்கூந்தலை தென்றல் காற்றில்
அலைபாய விட்டாள்..
என் மனதை அதனூடே தவழ விட்டு
அக்கூந்தல் மணத்தை
என் இதயமெங்கும் கமழ விட்டாள்..!
அக் கூந்தலின் மணத்தை
என் சுவாசத்திற்க்கு அர்ப்பணித்தாள்..!

அன்று அவள் எனக்காகவே
பிறந்தது போல் தோன்றியது..!
அவள் எனக்காவே என் வாசல் தேடி
வந்தது போல் இருந்தது..!
அன்று முழுவதும் அவளுடனேயே இருக்க
வேண்டுமென்றும் மனசு துடித்தது..!

காலமில்லாத காரணத்தால்
பிரிய மனமின்றி பிரிந்து வந்தேன்..!
அவளின் நினைவால்
பித்தனாய் மாறிச் சென்றேன்..!
அதனை இங்கே கவிதைச்
சித்திரமாய் வரைந்து நின்றேன்..!
இதில் வண்ணங்கள் இல்லை என்றாலும்
என் எண்ணங்கள் உண்டென்பதை
மறவாதே தேவதையே..!
அதோடு சேர்த்து எனையும்...?!

*******

(ஒரு நாள் என்னவள், என் வீட்டிற்கு தேவதையாய் வந்தாள்... அன்று அவளுடைய அழகு எனைப் பாடாய்ப்படுத்திவிட, அவளிடம் இதை எப்படிச் சொல்வேன்... என் ஏக்கத்தை அவளிடம் எப்படித் தெரிவிப்பேன் என யோசித்தேன்... கடைசியில் அதை இங்கே கவிதையாக உளறியிருக்கிறேன்... )
2 comments:

nandhu said...

அருமை அருமை தோழா !!!

உங்கள் தேவதையிடம் என்ன தயக்கம் ??
மீண்டும் கண்டீரோ அவர்களை ??

மோகனன் said...

@nandhu

நெடு நாள் கழித்து பதிலிட்டதற்கு மன்னிக்கவும்..!

கண்டுகொண்டேன்..கண்டுகொண்டேன்...ஆரம்பத்தில்தான் தயக்கம்.. இப்போதெல்லாம் சதா அவள் மயக்கம்தான்...

வாசித்தமைக்கு மிக்க நன்றி..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!