ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Monday, December 7, 2009

ஒரே ஒரு ஒற்றை வார்த்தைக்காக..!எதற்க்கும் அடி பணியாதவன்...
உன் அன்பிற்கு அடிமையானேன்..!
எவற்றுக்கும் அஞ்சாதவன்...
உன் பார்வைக்கு அஞ்சினேன்..!
அடிதடிக்கே பழக்கப்பட்டவன்...
உன் அன்பு கண்டு அண்ணலானேன்..!
பகட்டாகத் திரிந்து கொண்டிருந்தவன்...
உன் எளிமை கண்டு ஏழையானேன்..!
என்னுள் ஏற்பட்ட இத்தனை மாற்றமும்
நீ உதிர்க்கும் அந்த ஒரே ஒரு
ஒற்றை வார்த்தைக்காக
அன்பே எனைக் காதலி..!

(இதற்குச் சரியான படம் கிடைக்க வில்லை என்பதால்... பொதுவாய் இப்படி... ஹி...ஹி...நான் எடுத்த புகைப்படம் என்பதாலும் இப்படி..!)4 comments:

பூங்குன்றன்.வே said...

காதலால் மாறிட்டீங்க நண்பா.
ஹ்ம்ம்..நடத்துங்க :)

மோகனன் said...

வாங்க நண்பர் பூங்குன்றன்...

என்ன செய்யறது எல்லாம் காதல் செய்யும் மாயம்...

அதால மனசில் பெரும் காயம்... அதான் இப்படி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க...

கமலேஷ் said...

நல்ல ...
அழகான கவிதை..
வாழ்த்துக்கள்...

மோகனன் said...

அன்பு நண்பர் கமலேஷ் அவர்களுக்கு...

தங்களின் வருகைக்கும்... வாழ்த்திற்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க...