ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, September 4, 2009

அன்னை தெரசா...


அன்பான தெரசா அன்னையே..!
அகிலம் போற்றுது உன்னையே..!
சேவையின் உருவான அன்னையே..!
போற்றுவோம் தினமும் உன்னையே..!

அல்பேனியாவில் நீ பிறந்தாய்..!
இந்தியாவில் சேவை செய்தாய்..!
சேரிகளின் உள்ளே நுழைந்தாய்..!
அம்மக்களுக்கென்றே நீ உழைத்தாய்..!

யாரும் அனாதைகளில்லை என்றாய்..!
யாவர்க்கும் அடைக்கலம் தந்தாய்..!
தொண்டுக்கே தொண்டென வாழ்ந்தாய்..!
தொழுநோயாளிகளைக் கூட காத்தாய்..!

பாழும் ஏழைகள் வாழ வழிவகுத்
தாய்..!
பாரில் அவர்கள் ஏற்றம் பெற கல்வி தந்தாய்..!
எளிமைக்கே இலக்கணமாய் வாழ்ந்தாய்..!
சேவைக்கு என்றென்றும் நீதான் தாய்..!

கருணை இல்லத்தை நீ படைத்
தாய்..!
கைவிடப்பட்டோரை வாழ வைத்தாய்..!
'கன்னி'யாய் இருப்பினும் நீதான் தாய்..!
என்றென்றும் எங்களுடன் வாழ்கின்ற தாய்..!

(செப்டம்பர் 5, அன்னை தெரசாவின் நினைவு தினம், அவரது நினைவாக எழுதிய கவிதை)
2 comments:

புலவன் புலிகேசி said...

தேசத் தந்தை போல் தெரசாதான் தேசத்தாய்..

மோகனன் said...

அன்பின் நண்பர் புலவர் புலிகேசி...

தங்களின் கருத்து உண்மையாதே..தேசத் தாய் என்பதை விட சேவைகளின் தாயென்பது இன்னும் சாலப் பொருந்தும்...

அவர் வாழ்ந்த சம காலத்தில், நானும் வாழ்ந்தேன் அவரின் பிள்ளையாய் என எண்ணி கண்ணீர் பெருக்குகிறேன்...

தங்களின் வருகைக்கும்..பின்னூட்டத்திற்கும்... இணைப்பிற்கும்... எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க...