ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday, September 22, 2009

குழந்தையின் உறவுகள்..!
அழும் குழந்தையை
அமைதிப்படுத்த
அன்று...

அம்மாவின் தாலாட்டு..!
அப்பாவின் ஆறுதல் மொழி..!
அண்ணனின் பாட்டு..!
அக்காவின் கொஞ்சல்..!
தாத்தாவின் அரவணைப்பு..!
பாட்டியின் பாசமொழி..!

என உறவுகளின்
பாச விசாரிப்புகளில்
அக்குழந்தையின்
வீறிடல் நின்றது..!

இன்றோ..?
வீறிடும்
செல்போன் பாடலோடு
போகிறது...
அக்குழந்தையின் உறவுகள்..?!


(சென்னையில் தனிக்குடித்தனம் நடத்தும் இளம்தம்பதி , தங்கள் குழந்தையை அமைதிப்படுத்த செல்போனை பயன்படுத்தினர். அதைக்கண்ட போது, என்னுள் தோன்றியதை (27.03.2005 -அன்று) எழுதியது)No comments: