ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday, September 22, 2009

சுமை..!


குழந்தை பருவத்தில்
என் தாய்க்கு நான் சுமை..!
படிக்கும் வயதில்
புத்தகச் சுமை..!
பருவ வயதில்
பாழும் காதல் சுமை..!
நடுத்தர வயதில்
குடும்பச்சுமை..!
நரைத்த வயதில்
கூன் விழுந்த முதுகு சுமை..!
முதிய வயதில் என்
பிள்ளைகளுக்கு நானே சுமை..!
இதுதான் உலக உருண்டை தத்துவமோ..?
2 comments:

அமுதா கிருஷ்ணா said...

sir-க்கு இப்ப என்ன சுமை....

மோகனன் said...

நல்லதொரு வேலையில்லாத சுமையும்... குடும்ப சுமையும் இருக்கிறது தோழரே...

வருகைக்கு நன்றி... கவிதை பற்றி தங்களுடைய கருத்து..?

கருத்தை எதிர்பார்க்கிறேன்...