ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Thursday, September 17, 2009

பெண் சிசுவின் கேள்வி..!


அம்மா...
நான் செய்த
தவறென்ன...

உணர்ச்சியால்
நீ செய்த
திரைமறைவு
தப்பிற்கு...

நானல்லவா
குப்பை தொட்டியில்
வீசப்பட்டிருக்கிறேன்..?
4 comments:

Yeskay said...

arumai nanba... keep it up.

மோகனன் said...

தங்கத் தமிழ்த் தோழருக்கு வணக்கம்...

தங்கள் பெயர் தமிழில் தெரியாதது சுணக்கம்...

நம்மில் என்றும் இருக்கும் இணக்கம்...

தங்கள் கருத்து எனக்கு மாணிக்கம்...

நந்து said...

ஐயா ஒரு சிறு திருத்தம்
உங்கள் கவியில் பிழை உள்ளது .
பெண் சிசு ஒதுக்க படுவதற்கு உங்கள் கவிதை பொருத்தமில்லை!!
மன்னிக்கவும்!!
திரைமறைவு தவறுக்கு குழந்தைகள் (ஆண் பெண் பேதமில்லை) வஞ்சிக்க படுகிறார்கள்

மோகனன் said...

@நந்து

@nandhu

நெடு நாள் கழித்து பதிலிட்டதற்கு மன்னிக்கவும்..!

அன்பான நந்து அவர்களுக்கு...

நான் எழுதிய கவியின் மையம் எதுவெனில்... பெண் குழந்தையை வெறுக்கும் பெற்றோர்களைக் குறித்து... இது திருமணமாகாமல் குழந்தை பெறுபவர்களைப் பற்றி அல்ல...

இருப்பினும்... உங்களுடைய கருத்து ஏற்புடையதே... (திருமணமாகாமல் குழந்தை பெறுபவர்களாக இருந்தால்...)

வாசித்தமைக்கும், வழமையான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!