ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, November 13, 2009

உதடுகளை மறைத்துக்கொள்..!



உன் செம்பவள உதடுகளை
மறைத்துக்கொள்
பெண்ணே..!
உன் இல்லமருகே இருக்கும்
ரத்தின வியாபாரியின்
கண்களில்
பட்டுவிடப் போகிறது..!
பிறகு அவன்
எனக்குப் போட்டியாக
வந்துவிடுவான்..!



6 comments:

Tamilparks said...

போட்டி என்று வந்தால் விட்டு விடமுடியுமா?

மோகனன் said...

அதுதானே போட்டி எனில் விட்டுவிடுவேனா என்ன...

அவன் விற்பனைக்கல்லவா கேட்பான்... அது என்றன் விலை மதிக்க முடியாத சொத்தல்லவா...

போட்டி எனில் அவள் எனக்கு... வியாபாரியே என்னிடமுள்ள 'அவல்' உனக்கு...

வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி தோழரே

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Tamilparks said...

கண்டிப்பாக வருவேன்..

'பரிவை' சே.குமார் said...

kathal kavithaigal aruvi mathiri varuthey nanbarey. kavi arumai...

மோகனன் said...

தமிழ்த் தோட்டத்தின் வருகை எனில்... எமக்கு தமிழ்க் காற்று வருகை அல்லவா... வருக... வருக..

வருகைக்கும், பின்னூட்டத்திற்கும்.. ஆதரவிற்கும் நன்றிகள் பற்பல...

மோகனன் said...

அன்பு நண்பர் குமார் அவர்களுக்கு...

காதல் என்பது கடலல்ல..அது மழை போன்றது.. அது எப்போது பெய்யும்..எப்படிப் பெய்யும் என கணிக்க முடியாது...

பெய்ய ஆரம்பித்து விட்டால் அவ்வளவுதான்... துளித் துளியாய்ப் பெருகி, நம் மனதை மகிழ்ச்சி மழையில் நிரப்பி விடும்...

அது நிரம்பி கவிதை அருவியாக வந்திருக்கலாம்... (எப்படியோ சமாளிச்சிப்பிட்டேன்..)

வருகைக்கும், பின்னூட்டத்திற்கும்.. ஆதரவிற்கும் நன்றிகள் பற்பல தோழா...