டிசம்பர் பதினொன்று அன்று
எட்டயபுரத்தில் பிறந்தது பார்
அக்கினிக் குஞ்சொன்று அங்கு...
தமிழ்ப்புவியில்
எட்டுத் திக்கும் எதிரொலிக்க...
எட்டயபுரத்தில்
சங்கத் தமிழும் சடசடக்க...
சிங்கம் நிகர் சின்னசாமிக்கும்
தங்கம் நிகர் லட்சுமிக்கும்
பிறந்தது தமிழ்ச் சிங்கக்குட்டியொன்று..!
அதன் பேரோ சுப்பிரமணியனென்று..!
கல்வி பயிலும் பாலக வயதில்
ஆசுகவி பாட்டிசைத்த
காரணத்தால்...
சுப்பிரமணியர்க்கு சூட்டினர்
பாரதி என்ற ஏற்றதோர் பட்டத்தை..!
சங்கத் தமிழ் கற்றது மட்டுமின்றி
பற்பல சாத்திரங்கள் கற்றது மட்டுமின்றி
பன்மொழியினையும் கற்றுத் தெளிந்தான்
தமிழ்ப்பண் பாட்டிசையும் கற்றறிந்தான்..!
பாரதத் தாயின் அடிமைத் தளையை
அடிச்சுவட்டிலிருந்து அகற்றிடவே
எழுதுகோலை ஆயுதமாய்
பிரயோகித்தான்...
வார்த்தைகளில் வலிமையைக் காட்டியே
வறியோர்க்கும் வலிமையை ஏற்றினான்...
வீழ்ந்து கிடந்த மக்களை எல்லாம்
வீரர்களாய் மாற கவி சமைத்தான்...
சுதந்திரக் கனலை மூட்டி விட்டான்..!
முழுமையற்றவற்களை
முழுமையாக ஆக்கி விட்டான்..!
சாதிப்பிரிவுகளை எதிர்த்து நின்றான்...
ஏற்றத்தாழ்வுகளை அழித்து நின்றான்...
புதுக்கவிதையின் தந்தையாய்
உருவாகி நின்றான்..!
ஆசு கவிகள் பல படைத்து நின்றான்..!
எங்கள் மனதில் குன்றென நின்றான்..!
அவன் பெயர் மாகாகவி பாரதி என்றான்..!
எட்டயபுரத்தில் பிறந்தாலும்
எந்தன் தமிழுக்காகவே நீ பிறந்தாய்..!
இன்றுன் பிறந்தாநாள் அய்யா..!
மகாகவி பாரதி நீயன்று...
மகா பாரதத்தின் தீ
நீயெனக் கண்டு
நின் வழி போற்றி நிற்கின்றேன்..!
உன் புரட்சிப் பாதையில் அடியேனும்
அடிமையாய்ப் பின் தொடருகிறேன்...
உன் சொல் காத்து நிற்கின்றேன்...
நீ பிறந்த இந்நாள் அய்யா...
இந்த தேசத்திற்கே
தேசியக் கவிஞர் தினம் அய்யா..!
வாழ்க எம்மான்...
எங்களுள் அமரனாய் என்றும்
வாழ்கிறாய் எம்மான்...
- மோகனன்.
(தேசியக் கவியாகிய மகாகவி பாரதியாருக்கு இன்று 128 –வது பிறந்தநாள் விழா... அவருக்கு இந்தக் கிறுக்கனின் கிறுக்கல் சமர்ப்பணம்...)
"கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி"
– மகாகவி பாரதியார்
7 comments:
பாரதி பிறந்த நாளை தவறாக சுட்டியுள்ளீர்கள்.
செப்படம்பர் அல்ல டிசம்பர்
அடடா.. அறியாமல் செய்த எழுத்துப் பிழையை அன்புடன் சுட்டிக்காட்டிய அன்புத் தோழர் தங்கமணி அருணுக்கு
என் பணிவான நன்றிகள் உரித்ததாகட்டும்
இதோ மாற்றி விட்டேன்...
தங்களு கருத்திற்கும், வருகைக்கும் நன்றிகள் பற்பல
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
நல்ல கவிதை...
அழகாக இருக்கிறது...
நல்ல கவிதை...
அழகாக இருக்கிறது...
நல்ல கவிதை...
அழகாக இருக்கிறது...
அனபின் தோழர் தமிழ்த்தோட்டத்திற்கு
தங்களின் வாழ்த்திற்கு எனது
நன்றிகள்...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
அன்பான கமலேஷ் அவர்களுக்கு
தங்களின் அளவில்லாத அழகான வாழ்த்திற்கு எனது அன்பான நன்றிகள்...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
Post a Comment