ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, March 19, 2010

உன் அருகாமைச் சுகத்தில்..!


எனைப் பார்த்தும்
பார்க்காமல் போனது ஏன்..?
என்னிடம் பேச நினைத்தும்
பேசாமல் போனதேன்..?
என அத்தனையும் உனைப் பார்த்ததும்
கேட்க வேண்டுமென நினைப்பேன்..!
உனைப் பார்த்த வினாடியில்
அத்தனையும் மறந்தபடி
உன் அருகாமைச் சுகத்தில்
அசைவற்றுப் போய் விடுகிறேன்…



12 comments:

Tamilparks said...

காதல் சுகமே தனிதான்

karthik said...

AMAZINGGGGGGGGGGG
NICE WORDS

நாமக்கல் சிபி said...

அருமை!

மோகனன் said...

காதல் சுகத்தை ரசித்த தமிழ்த்தோட்டத்திற்கு நன்றி...

ரொம்ப நாள் கழிச்சி வந்திருக்கீங்க... அதுக்காகவும் ஒரு நன்றி தோழரே..!

மோகனன் said...

அன்பு நண்பர் காரத்திக் அவர்களுக்கு...

தங்களின் ரசனைக்கு எனது நன்றிகள்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

அன்பு நண்பர் நாமக்கல் சிபி அவர்களுக்கு...

தங்களின் ரசனைக்கும், பின்னூட்டத்திற்கும் எனது நன்றிகள்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க தோழரே..!

கலா said...

மோகனன் இதைத்தான்
மின்சாரத் தாக்குதல் என்பதோ!?

மோகனன் said...

உண்மைதான் தோழி...

மின்சாரம் ஆளைக் கொள்ளும்... பெண் சாரம் ஆசையைக் கொள்ளும்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

கலா said...

http://www.youtube.com/watch?v=Acq6H54Ow2k

மோகனன் இந்தப் பக்கம் போய்ப் பாருங்கள்
நான் மலரோடு தனியாக...... என்ற பாடலை!
கிடைத்ததா? கேட்டதா? எனத் தயவுசெய்து
தெரியப்படுத்தவும்.

மோகனன் said...

கிடைத்தது தோழி... மிக்க நன்றி...

நான் கேட்டது mp3 வடிவிலான கோப்பு, பதிவிறக்கத்தோடு கேட்டேன்...

நன்றி ... நான் பார்த்துக் கொள்ளுகிறேன்...

மகிழ்நன் said...

உங்கள் வாழ்க்கையில் காதல் நிரம்பி வழியட்டும், காதல் வந்துவிட்டால் உலகையே நேசிக்க தொடங்கிவிடுகிறார்கள்....எனக்கு அந்த அனுபவம் உண்டு....

உங்கள் அந்த மின்சார அனுபவம் எனக்கும் உண்டு என்ற அலைவரிசையில்தான் இந்த பின்னூட்டம்...

அதோடு, ஒரு தகவல்....

கல்லாமை, இயலாமை,என்ற வரிசையில் அருகாமை என்பது தொலைவைத்தான் குறிப்பிடும்....அருகில் இருப்பதை அல்ல...கொஞ்சம் கவனத்தில் கொள்ளவும்...

நன்றி,

மகிழ்நன்.
http://kayalmakizhnan.blogspot.com
9042274184

மோகனன் said...

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி தோழரே...

தாங்கள் சுட்டியதில் உண்மையில்லை

அருகாமை என்றால், அருகில் என்றுதான் பொருளாகும்..!

தாங்கள் சொல்வது பிழையானதாகும்... வேண்டுமெனில் தமிழகராதியைப் பார்க்கவும்..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!