ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday, March 23, 2010

உன் மௌனப் புன்னகைக்கு முன்..?


பேசா மடந்தையாகி விட்ட
உன்னைப் பேச வைக்க
உன்னிடம் என்னென்னவோ பேசுகிறேன்…
பதிலுக்கு நீ மௌனத்தை
பரிசாகத் தருகிறாய்…
உனை என்னிடம் பேச வைக்க
பகீரதப் பிரயத்தனங்களை
செய்து பார்க்கிறேன்…
பதிலுக்கு உன் மௌனப் புன்னகையை
பரிசாகத் தருகிறாய்..!
அந்த மௌனப் புன்னகைக்கு முன்
என் அத்துனை முயற்சிகளும்
ஆயுள் இழந்து விட்டன என்பதை
பகிரங்கமாக ஒத்துக் கொள்கிறேன்..!
இப்போதாவது பேசு..!6 comments:

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

அய்யா நான்தான் பர்ஸ்ட்.
கவிதை அருமை !

மோகனன் said...

மிகவும் நன்றி சங்கர்..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அருமையான கவிதைகள்

உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

மோகனன் said...

வாங்க ஸ்டார்ஜன்...

தங்களின் வருகைக்கும், வாசிப்பிற்கும்.. எனது மேலான நன்றிகள்...


என்னை பிறருக்கு அறிமுகம் செய்தது கண்டு மிக்க மகிழ்ச்சி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

கலா said...

உன்னிடம் என்னென்னவோ பேசுகிறேன்…
பதிலுக்கு நீ மௌனத்தை
பரிசாகத் தருகிறாய்\\\\\


சகோதரி பார்த்து..... எதைக் கேட்டாலுமா!!??
அப்புறம் மெளனம் சம்மதத்துக்கு அறிகுறியாகிவிடும்
வம்புல... மாட்டிக்காதங்க
இந்தக் காலத்தில நாம வாயாடியாக இருந்தால்தான்
தப்பிச்சுகலாம்.

மெளனம் கலையாமலே....
மலர்ந்த புன்னகையால்.
உங்கள்....
எண்ண விரிசலில்
ஈட்டி வந்த கவிதை...

நன்று மோகனன்.

மோகனன் said...

மிக்க நன்றி தோழி...


உங்கள் சகோதரி வாயாடியல்ல...ஆனால் வாதக்காரி... தப்பென்றால்... என் முதுகில் தப்பி விடுவாள்... சரியென்றால் அன்போடு தட்டிக் கொடுப்பாள்..

காதலோடு பார்த்தேன், பேசினேன் என்றால் அவளிடமிருந்து வெட்கப் புன்னகையும், மௌனமும்தான் வரும்...

அதே சமயம் என்னை அவள் ரசிப்பதை நிறுத்த மட்டும் மாட்டாள்...

தங்களின் கவியூட்டிய பின்னூட்டத்திற்கு கனிவான நன்றிகள்..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!