ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, March 17, 2010

உன் மடி மீது தலை சாய..!


உன் மடி மீது தலை சாய
ஆசைப்பட்ட எனக்கு…
உன் நெஞ்சணையில்
எனைச் சாய்த்து
வள்ளல் எனக் காட்டி விட்டாய்..!
என் மீசைதனை பிடித்திழுத்து
உன் குறும்புகளை
அவிழ்த்து விட்டாய்..!
இதை அத்தனையும்
ஆனந்தமாய் என்
அடி மனதில் சேமிக்கிறேன்..!
நீ என்னருகே இல்லாத
தருணங்களில்
மீட்டெடுத்துப் பார்ப்பதற்கு..!4 comments:

Madurai Saravanan said...

கவிதை அருமை. வாழ்த்துக்கள்

மோகனன் said...

நன்றி தோழரே...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

கலா said...

அடி மனதில் சேமிக்கிறேன்..!
நீ என்னருகே இல்லாத
தருணங்களில்
மீட்டெடுத்துப் பார்ப்பதற்கு..!\\\\\

எங்க சார் அடிக்கடி உங்களைத் தனியாக
தவிக்க விட்டுவிட்டுப் போகிறார்கள்?

காதல் வரிகள் நன்றி

மோகனன் said...

அடிக்கடி அவள் வீட்டிற்கு சென்று விடுகிறாளே...

நானோ அலுவலகத்திற்கு வந்து விடுகிறேனே..! என்ன செய்வது... அவளில்லதா நேரம் எனக்கு அர்த்தமற்றதாகவே தோன்றுகிறது..!

தங்களின் வருகைக்கும்... அழகான பின்னுட்டத்திற்கும்..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!