ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, March 17, 2010

அதிகாலையில்..!


அதிகாலையில் கூவும் குயிலாய்
உன் மயக்கும் குரல்..!
அதிகாலையில் உதிக்கும் சூரியனாய்
உன் மஞ்சள் முகம்..!
அதிகாலையில் எழுப்பும் அன்னையாய்
உன் அன்பு எழுப்பல்..!
அதிகாலையில் மலரும் மல்லிகையாய்
உன் அழகிய புன்னகை..!
இந்த சுகங்களத்தனையும்
அதிகாலையிலேயே எனக்கு
கிட்டுமென்றால்...
என் காலம் முழுதும் எனக்கு
அதிகாலையாகவே இருக்கட்டும்..!
என்னவளின் அழகு தரிசனம்
எனை அனுதினமும் அள்ளித் தின்னட்டும்..!8 comments:

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

கவிதை மிக அருமை.. வாழ்த்துக்கள்.

மோகனன் said...

மிக்க நன்றி ஸடார்ஜன்...

அடிக்கடி சுவாசிக்க வாங்க..!

கலா said...

என்னவளின் அழகு தரிசனம்
எனை அனுதினமும் அள்ளித்
தின்னட்டும்\\\\\\

பார்த்து மோகனன் அப்புறம் திகட்டும்

பெண்ணின் பெருமைகள்
பேசிகின்றன உங்கள் கவிதைகள்
அனைத்தும்....

நல்லவரிகள் நன்றி

மோகனன் நான் அப் பாட்டைக்
{நான் மலரோடு.....}
கண்டு பிடித்து விட்டேன் அதனால்
நீங்கள் கஷ்ரப்படவேண்டாம்
நன்றி

மோகனன் said...

அன்பான கலா அவர்களுக்கு..!

தங்களின் வருகைக்கும், வாசிப்பிற்கும், வாழ்த்திற்கும் எனது மேலான நன்றிகள்..!

என்னவள் என்றும் எனக்கு திகட்டாதவள்... காரணம் தினமும் புதிதாய்ப் பூக்கும் மலரவள்... நான் அவளை தினமும் ரசிக்கும் காதலன்...

நன்றி.. பாடலைக் கண்டு பிடித்ததற்கு... எனக்கும் அனுப்பி வையுங்களேன்...

நானும் கேட்டு மகிழ்கிறேன்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

கலக்கல் நண்பரே !

அருமையான சிந்தனை !

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

மிகவும் ரசிக்கும் வகையில் இருந்தது வாழ்த்துக்கள் !

மீண்டும் வருவான் பனித்துளி !

மோகனன் said...

வாங்க சங்கர்..!

தங்களின் ரசனைக்கேற்றாற் போல் என் கவிதை அமைந்திருப்பது கண்டு அகமகிழ்கிறேன்..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

நன்றி சங்கர்..!