ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Thursday, March 25, 2010

இதோ... இந்நொடியிலிருந்து..!


என் பாதை
கரடு முரடானது என்று
தெரிந்த பின்னும்...
எனை அறியாமல்
என் சுவடைப்
பின் தொடருகிறாய்..!
என் பேச்சு
சற்று நாகரீகமற்றது எனத்
தெரிந்த பின்னும்...
எனை அறியாமல்
என் பேச்சை
நாகரீகப்படுத்துகிறாய்..!
என கொள்கைகள்
உனக்குப் பொருந்தாது என்று
தெரிந்த பின்னும்...
எனை அறியாமல்
என் கொள்கைகளைப்
பின்பற்றுகிறாய்..!
இத்தனையும் எனை
அறியாமல்
செய்தவளே..!
உன் அன்பை இப்போதுதான்
கண்டுகொண்டேன்..!
இதோ... இந்நொடியிலிருந்து
நான் உனக்கானவனாக
மாறி விட்டேன்..!2 comments:

கலா said...

தூய அன்{பால்}பை நேசிப்பவர்கள்
இப்படித்தான் இருப்பார்கள்
இப்படி எதுவும் பாராமல் வருவதுதான்
காதல் ஜய்யா!
எல்லாமே கேட்டுப்,பார்த்து,அறிந்து வருவது
காதலா!?

இப்போது சிலர் செய்யும் காதலைப் பார்த்தால்
சிரிப்பதா?அழுவதா? என்ன செய்வதென்றே
புரியாது

என்றாலும் நீங்கள் அதிஷ்ரம் செய்தவர்
நன்றி தோழரே!!

மோகனன் said...

நன்றி தோழி...

தாங்கள் சொல்வது அத்தனையும் உண்மைதான்...

என்னவள் எனக்கு இதுபோல் அமைந்திருப்பது என் பாக்கியம்தான்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

//நான் மலரோடு தனியாக ஏன் இங்கு வந்தேன்... பாடல் பதிவிலிட்டாயிற்று.... பார்த்தீர்களா கலா..?//