ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Monday, March 8, 2010

அன்பை உலகிற்கு அளிக்கும்..!


இம்மண்ணை தாய் மண்ணென்றழைத்த
நம் முன்னோர்க்கு வணக்கம்..!
தங்கத் தமிழை தாய்த்தமிழ்
என்றழைத்த தமிழனுக்கு
என் தலைவணக்கம்..!
இம்மண்ணிற்கு எனை
ஈன்றளித்த என்
அன்னைக்கு வணக்கம்..!
என் கண்ணிற்குள் நுழைந்து
கவிதையாய் மாறிய
என் காதலிக்கு வணக்கம்..!
என்றன் வாழ்வினையாய் மாறி
என்னுள் வாழ்கின்ற
துணைவிக்கு வணக்கம்..!
அன்பினைப் பொழியும் என்
அன்பு மகளுக்கு வணக்கம்..!
அன்பை உலகிற்கு அளிக்கும்
அகிலத்து மகளிர்க்கு வணக்கம்..!

******

அன்பில்லா வாழ்க்கையும் பாழ்
அன்னையில்லா அண்டமும் பாழ்..!

மண்ணில்லா மரமும் பாழ்
பெண்ணில்லா உறவும் பாழ்..!

உயிரற்ற இவ்வுடலும் பாழ்
பெண்ணற்ற ஆணும் பாழ்..!

 ******

என்னை இம்மண்ணில் உலவ விட்ட என் அன்னைக்கும், எனை நேசிக்கும் என் பெண் கவிதைக்கும், என் தோழிகளுக்கும், நாங்கள் ரசிக்கும் எங்களின் பெண் மகள்கள் உள்ளிட்ட அனைத்து உலக மகளிருக்கும் இச்சிறுவனின் இனிய மகளிர் தின வாழ்த்துகள்..!

வாழ்க நம் பெண்குலம்..!
2 comments:

திவ்யாஹரி said...

உங்கள் காதல் கவிதைகள் போல.. இதுவும் அருமை நண்பா... நேரமின்மை காரணமாக சில பதிவை படிக்க வில்லை நண்பா.. இன்று அனைத்தும் படித்தேன்.. நன்றாக உள்ளது..

மோகனன் said...

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்..! நட்பிற்கும் உண்டோ நகைக்கும் ஆள்..!

தங்களுக்கு மகளிர் தின வாழ்த்துகள் தோழி..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!