ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, March 26, 2010

அழகற்ற பொருள் கூட..?


உன் கண்ணழகை
ரசிப்பதற்கே
எனக்கு நேரம் போதவில்லை..!
இதில் உன் ஆடையழகைப் பற்றி
என்னிடம் கேட்டால்
நான் என்னென்று சொல்ல..?
பெண்ணழகே…
அழகற்ற பொருள் கூட
உன்னோடு சேர்ந்தால்
அத்தனையும் அழகாகி விடும்…
நானும் அழகாகியதைப் போல்..!4 comments:

பழமைபேசி said...

// குறைகளைச் சுட்டுங்களேன்...//

சுட்டுகிறேன்
சுட்டுவதற்கு
ஏதும் அகப்படவில்லையே என!!

மோகனன் said...

அன்புத் தோழருக்கு..!

நெடுநாடகளாகி விட்டது... பின்னூட்டத்தில் தங்களை சந்தித்து..?

மோதிரக் கையால் குட்டு வாங்கியது போலிருக்கிறது... தங்களின் பின்னூட்டம்... அது எனக்கு ஊட்டம்..!

மிக்க நன்றி..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

கலா said...

நானும் அழகாகியதைப் போல்..!\\\\\\\\

உங்களை அவர்கள் அழகாக்கவில்லை!!
உங்கள் அழகில் அவர் புதைந்து விட்டார்

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில்
அழகுதான் அவரவர்களுக்கு
அது தெரிவதில்லை மோகனன்

மோகனன் said...

தங்களின் வரவு மகிழ்ச்சியைத் தருகிறது...


தாங்கள் கூறுவது பாதி உண்மை... மீ தி உண்மையில்லை... என்னழகில் அவள் புதையவில்லை...

காரணம் நான் அழகனுமில்லை..!

நான் அழகாகியதான் காரணம், என்னவள் எனைப் பாரக்க வேண்டுமென்பதற்காக, பேசவேண்ட்மென்பதற்காக என தரத்தை இன்னும் சற்று உயர்த்திக் கொள்வதைச் சுட்டுகிறேன்.. அவ்வளவே..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்'கலா...'!