ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, September 11, 2009

மகா கவி பாரதிக்கு கவிதாஞ்சலி




பெண்களை உயர்த்துவோம் பேதமை அகற்றுவேம்
சிந்தையில் நல்லெண்ணங்களைக் குவிப்போம்...
பாரதத் தாயின் விலங்கினை அறுப்போம்...
வெள்ளைப் பரங்கியனை நாடு கடத்துவோமென்றவன்..!

பேத நிறை சமூகம், பேய் நிறைக் கொடூரம்
கொண்ட மூடப் பழக்கங்களை கிழித்தெறிந்தவன்...
வேதங்கள் பொய்... வேள்விகள் பொய்...
சாதிகள் பொய்... சமத்துவமே மெய்யென்றவன்..!

வீறு கொண்டெழுவாய்... வேதனை துடைப்பாய்...
கொடுஞ் சாதிகளகற்றுவாய்... சரித்திரம் படைப்பாய்...
வீறு கொண்டெழுவாய்... விண்ணில் நடப்பாய் என
பத்திரிகை ஆசிரியனாய் பாமரனுக்கும் எழுதியவன்..!

பாமரரும் புரிந்து கொண்டு பகுத்தறிவு பெறவதற்கு
கேலிச்சித்திரத்தால் சமூக அவலத்தைக் காண்பித்தவன்
நமக்கு ஏவலர்கள் தேவையில்லை... - தேச
காவலர்கள் வேண்டுமென்ற நிலையைப் படைத்தவன்..!

பரங்கியரிடம் பணிந்திருந்த பாமர மக்களை
தன் புரட்சிப் பாக்களால் புத்துயிரூட்டியவன்
முண்டாசு கட்டியபடி, எழுத்தாணி தீட்டியபடி சமூக
முரண்பாடுகளை வேரறுக்க புறப்பட்டவன்..!

எட்டயபுரத்தில் பிறந்து எட்டு திக்கும்
செந்தமிழ்க்கவியால் சுதந்திரத்தை வளர்த்தவன்
எந்தன் மகாகவி சுப்பிரமணிய பாரதி..!
விந்தன் எந்தன் சுந்தரத் தமிழன் பாரதி..!

கடும் நோயால் விண்ணுலகம் சென்றாய் நீ
உன்பிரிவால்
தமிழன்னை கண்ணீர் உகுக்கிறாள்
உன் கவி முகம் காணாத நம்
தமிழுலகம்
சூரியனை இழந்த வானம் போல் இருண்டுவிட்டது

மண்ணில் நீ மறைந்தாலும் எம்மில் நீ

திண்ணமாய் நீக்கமற வாழுகின்றாய்...
நம் தமிழன்னை தேம்பித் தேம்பி அழுதாழும்
உன் தேன்கவி படித்து ஆறுதல் கொள்கிறாள்..!

தமிழகத்து வானில் ஓப்பற்ற கவிச்சூரியன் நீ..!
நீ நீங்கிய இந்நாள் தமிழகத்தின் துக்கநாள்...
வளரிளங்கவி தலைமுறையின் துயரநாள்...
நீ நீங்கினாலும் ஐயா... நின் கவி மறையாது..!

நின் புகழ் மறையாது... நீ புரட்சிக் கவி மட்டுமல்ல
எங்களின் தேசியக் கவி...
தீவிர தேன்தமிழ்க் கவி நீ...
உன்னடி தொழுதபடி கண்ணீரோடு காகித்திலிட்ட
என் கவிதாஞ்லி உன் திருவடியில் சமர்ப்பணம்..!

(11.09.2007அன்று எழுதியது, சிற்சில மாற்றங்களுடன்,
கண்ணீரோடு இங்கு பதிவிலிடுகிறேன் ..)




10 comments:

passerby said...

புரட்சிக்கவிஞர் என்றா பாரதிக்குப் பெயர்? அப்பெயர் பாரதிதாசனுக்கல்லவா?

மோகனன் said...

உண்மைதான்... ஆயினும் இப்பெயர் பாரதிக்கு எக்காலத்திலும் பொருந்தும் என்பதற்காக அப்படிக் குறிப்பிட்டேன்...

ஆயினும்... அதை தற்போது திருத்தி வெளியிடுகிறேன்... தங்களின் மேலான கருத்திற்கு... என் சிரம் தாழ்ந்த நன்றிகள்...

passerby said...

நன்றி.

தலைப்பில் ’மாகா கவி’ என்று எழுதியிருக்கிறீர்கள்.

அதையும் திருத்திவிடுங்கள்.

மோகனன் said...

தோழரே.. சிறு கவனக் குறைவால் மிகப் பெரிய பிழைகளைச் செய்து விடுகிறேன்... அவசர கதியில் இவைகள் நிகழ்ந்து விடுகின்றன... நன்றி... நன்றி.. திருத்தி விட்டேன்...


அடிக்கடி வாங்க... என் குறைகளை குட்டுங்க... நன்றி...

alex paranthaman said...

மிகவும் அருமையான கவிதை தோழரே

மோகனன் said...

அன்பு நண்பர் மன்னார் அமுதன்...

தங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் எனது நன்றிகள்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

நந்து said...

என் கவியை பாடிய உன் கவிக்கு
பாராட்டுகள் சொல்ல நினைகிறேன்
முடியவில்லை !!
என்னென்று நீ நினைப்பாய்
ஏனென்றால் அவன் நம் கவி

எனினும் என் பாரதியை பாடியமைக்கு நன்றி

மோகனன் said...

@nandhu

நம் கவியை பாடியதற்கு நன்றி எதற்கு தோழா...

அது நம் அனைவரின் கடமை...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

tamil cinema said...

பெண்களுக்காக பாடுபட்ட ஒரு உன்னத தலைவர்

மோகனன் said...

வருகைக்கு நன்றி தமிழ் சினிமா..!