ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday, September 29, 2009

என்றன் தாய் - மரபுக் கவிதை (முயற்சி)

                              எனைப் படைத்த பிரம்மாக்கள்

எண்பா

அன்பென்ற சொல்லுக் கர்த்த மும்நீயே..!
துன்பமொன் றுநேரின் துடிப்பவ ளும்நீயே..!
உன்னுடலைக் கவசமாக் கிகாத்தவ ளுமீயே..!
பொன்னுல கிலுன்போலா ருமில்லையே..!

உய்யுள்

கருவறையில் நானுதித்த போதுகளிப் பெய்தினாய்
அரும்பொருளே உன்வயிறை எனக்ககில மாக்கினாய்
பெருவயிறை தடவிப்பார்த்து பெருமித மடைந்'தாய்'
உருக்கொடுத்த 'தாயே'யுன்போ லாருமில்லையே..!

வெளியுலகை நான் காணபுவி வருகையில்
வளிமண்டல மதிரும்படி அலறித் துடித்'தாய்'
உளிவெட்டு 'வதை'ப்போன்ற வலியைப் பொறுத்'தாய்'
தளிரெனைகாத் த 'தாயே'யுன்போ லாருமில்லையே..!

பத்தியம் கடைபிடித்த பரம்பொருளேயனைக் காத்'தாய்'
நித்தமிமை சோராமல் விழித்திருந் தெனைப்பார்த்'தாய்'
கத்தியழுகை யிலுன்னுதிரத்தை எனக்கமு தாக்கினாய்
உத்தமத் 'தாயே'யுன்போ லாருமில்லையே..!

மழலையான் சிரித்த போதுநீயும் மழலையானாய்
அழகுமக னானென்று ஆனந்த மடைந்'தாய்'
குழவியான் நோயுற்றால் பதறித் துடித்'தாய்'
வாழவைத் த 'தாயே'யுன்போ லாருமில்லையே..!

பள்ளிநான் செல்லுகையில் பரவச மடைந்'தாய்'
துள்ளிவிளை யாடுகையில் மகிழ்ச்சி யடைந்'தாய்'
கள்ளமில்லா யன்புதனை ஊட்டி மகிழ்ந்'தாய்'
வள்ளியென் 'தாயே'யுன்போ லாருமில்லையே..!

கல்லாத பரம்பரையில் கல்விபயில் கிறேனென்று
கல்லூரிக்குச் செல்லுகையில் கண்ணீர் உகுத்'தாய்'
தொல்லையின்றி படிப்பதற்கு தொண்டு புரிந்'தாய்'
அல்லிமலர்த் 'தாயே'யுன்போ லாருமில்லையே..!

மேற்படிப்பு படிப்பதற்கு சென்னை செல்கையில்
கற்பதுன் கடமையாடா கற்றுவா யென்றாய்..!
பொற்பொருளை எனக்களித்து புறப்ப டென்றாய்..!
ஊற்றான 'தாயே'யுன்போ லாருமில்லையே..!

காதலினால் கடிதவறு செய்தேன் - அதனால்
சேதமுற்ற வாழ்க்கைதனை சேர்த்து வைத்'தாய்'
அதன் பாதகமோயெனை பிரிந்து வாழ்கிறாய்
இதமான 'தாயே'யுன்போ லாருமில்லையே..!

பட்டணத் திலிருந்தாலும் தாயேயுன் நினைவு
திட்டமாய் திரும்பத் திரும்ப வருகிறது
எட்டாத பொருளில்லை தாயேயிங் கெனக்கு
கிட்டாத 'தாயே'யுன்போ லாருமில்லையே..!

பொன்னான உன்சொற் பதம்வேண் டியபடி
உன்பொற் பாதம் பணிகிறே னென்'தாயே'..!
என்றுமுன் மகவாகப் பிறக்கின்ற வரம்தனை
ஈன்றயென் 'தாயே'யுன்போ லாருமில்லையே..!


{எனைப் பெற்ற என் தாய்க்கு இந்த மரபு மீறிய கவிதை முயற்சி சமர்ப்பணம்.}




2 comments:

அ. நம்பி said...

அன்பருக்கு,

//எனைப் பெற்ற என் தாய்க்கு இந்த மரபுக் கவிதை(யாக எழுத முயறிசித்துள்ளேன்... தமிழாய்ந்த அறிஞர்கள்.. இதில் பிழையிருப்பின், தவறுகளை சுட்டிக் காட்ட வேண்டுகிறேன்...)//

உங்களால் பாட்டியற்ற இயலும்; ஓரளவு பாட்டிலக்கணப் பயிற்சி பெறுவது பயன்தரும்.

நாளை என் வலைப்பக்கத்தில் (வளமை) பாட்டியல் தொடங்க உள்ளேன்; அன்புகூர்ந்து வருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

http://valamai.blogspot.com/

மோகனன் said...

அன்பு நண்பருக்கு... எழுத்துப்பிழையை சுட்டியமைக்கு மிக்க நன்றி...

வருகைக்கும் கருத்திற்கும் மனமார்ந்த வணக்கங்கள்... நிச்சயம் நாளை உமத் வலைக்குடிலுக்கு வருகிறேன்...