தனியாக கிளைத்து
முளைத்திருக்கும்
என்னுடைய பல்லைப் பார்த்து
'அழகான தெற்றுப் பல்' என்றாய்..!
அழகற்ற எனைப் பார்த்து
'அழகின் சிகரமே' என்றாய்..!
என் சாதாரண நடையைக் கூட
'அழகு மயில்' நடையென்றாய்..!
ம்ம்ம்… உன்னைப் போலவே
அழகாய்த்தானிருக்கிறது…
நீ சொல்லும் பொய்களும்..!
- மலர்விழி மோகனன்
(என்னைப்பற்றி என்னவளின் மனதில் உள்ளதை, அவளின் பேரில் வடித்த கவிதை)
6 comments:
கம்பன் வீட்டு தறியும் கவி பாடும் என்பதுமாதிரி உங்களவங்களும் நல்லா எழுதறாங்க.போட்டி உங்க வீட்லயே இருக்கு மோகனன்.
நன்றி தோழரே...
இல்லத்தரசி மட்டுல்ல... இதயத்தரசியின் இனிய மனத்தில்
உள்ளவை காட்டும் இனிய கவியரசி அவள்...
தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் பணிவான வணக்கங்கள்...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
அடடே...!
நண்பனின் கவி வரிகளை அண்ணியின் வரிகள் அள்ளிச் சென்றுவிட்டதே..!
வாங்கப்பூ...
அது எப்படிய்யா உங்களால மட்டும் முடியுது... என்னதான் சொன்னாலும் உங்களை என்னிக்கும் இளமையா காமிச்சுக்க முடியாது..?
என்னவோ... என்னை விட என்னவளின் கவிதை சிறப்பாக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே...
தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் பணிவான வணக்கங்கள்...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
கலக்கீட்டாங்களே
அவங்க தமிழை நேசிக்கறவங்க... அப்படியே என்னோட கவித் தமிழையும் நேசிக்கறவங்க... அப்புறம் கேக்கவா வேணும்
தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் பணிவான வணக்கங்கள்...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
Post a Comment