குருகுல வாசம் பயிலவில்லை நின்பாதத்
திருத்தாழ் பணியவில்லையாயினும் - நீரெனக்கு
அருந்தமிழ்ப் பயில்வித்து ஐயம் நீக்கினீர்
மருந்தமிழே யுனை மறவேன்
- மோகனன்
(எனது சென்னை வாழ்விற்கு காரணமாயிருந்த, எனது இளங்கலை வகுப்பின் தமிழாசிரியர்களுள் ஒருவரான திரு. நல்லதம்பி ஐயா அவர்களை 21.11.2009 அன்று சந்தித்தேன். பத்து வருடங்களுக்கு முன்பு எனக்கு தமிழ்ப்பாடம் எடுத்தவர். இந்திய அளவில் பல்கலைக்கழக மானியக் குழு நடத்தும் (UGC - NET Exam) தேர்விற்காக, அவரிடம் இன்று ( 21.11.2009) மீண்டும் பாடம் படித்தேன்.
எனக்கமைந்த தமிழாசிரியர்களுள் சிறந்தவர் திரு. நல்லதம்பி ஐயா அவர்கள், அவருடன் தியாகராய நகருக்கு (அன்று மாலை 6.45 மணி அளவில்) பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது அவருக்காக எழுதிய வெண்பா வடிவில் எழுதிய மரபுக் கவிதை. அதை அவரிடம் கொடுத்தேன்... படித்து, பின் பாராட்டி மகிழ்ந்தார்...
அதே மகிழ்ச்சியை உங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்)
2 comments:
கற்று தந்த ஆசானை மறக்கக்கூடாது... அதை நீங்களும் செய்துள்ளீர்கள் நண்பரே, வாழ்த்துக்க்ள்
'எழுத்தறிவித்தவன் இறைவன்' என்பது நம்ம ஆன்றோர் வாக்கு...
என் தாய்த்தமிழை எனக்கு போதித்த ஆசிரியர்களுள் இவர் முக்கியமானவர்...
நான் இந்நிலைக்கு வரக் காரணமாக இருந்ததன் முதல் உந்து சக்தி இவர்...
எளிமையின் சிகரம், பழகுவதில் பணிவு... சுறுசுறுப்பில் தேனீ...
அவரை நான் மறவேன்... அவர் தமிழ் மரபில் இருப்பதால், அவருக்கு மரபுத்தமிழில் எழுதினேன்...
வருகைக்கும், வாசிப்பிற்கும், கருத்திற்கும் எனது அன்பான நன்றிகள்...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
Post a Comment