ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday, March 30, 2010

நீ என்னிடம் வரும் நாள்..?


எதற்கெடுத்தாலும்
விரல் விட்டு எண்ணும்
சிறு குழந்தையைப் போல…
அனு தினமும் - உன்
அடியவனும் விரல் விட்டு
எண்ணிக் கொண்டிருக்கிறேன்…
நீ என்னிடம் வரும் நாள்
எப்போது வரும்
என்பதற்காக..?
அலுமினியப் பறவையில்
பறந்து சென்ற
அன்னப் பறவையே…
உனக்கென கவி விடு தூது அனுப்புகிறேன்..
காற்றாய் விரைந்து வந்து விடு...
என்னுள் கவி மூச்சுக் காற்றாய் கலந்து விடு..!




6 comments:

மதுரை சரவணன் said...

அலுமினியப்பறவை எனக்கு பிடித்திருக்கிறது வித்தியாசமான சிந்தனை. வாழ்த்துக்கள்

மோகனன் said...

வாருங்கள் தோழரே...

'அலுமினியப் பறவை' என்னும் இந்த சொல்லாடல் கிரைம் நாவல் எழுத்தாளர் ராஜேஷ் குமாரிடம் இருந்து எடுத்துக் கொண்டது என நினைக்கிறேன்...

காரணம் என் இளம் வயதில் அப்படி படித்ததாக ஞாபகம்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

கலா said...

அழகாய்க் கொள்ளை கொள்ளும் குழந்தைப்
படம்.

ம்ம்ம்மம்...குழந்தை அடம் பிடிப்பதென்று சீக்கரம்
வரவேண்டாம் சகோதரி!
இன்னும் இரண்டு வாரம் போகட்டும்!!

நல்லவரிகள் மோகனன் நன்றி

பனித்துளி சங்கர் said...

கவிதை கலக்கல் .
அருமையான சிந்தனை . வாழ்த்துக்கள் !

மோகனன் said...

வாங்க தோழி...

நல்ல எண்ணம் தோழி உங்களுக்கு..

அவள் பிரிவை என்னால் தாங்க இயலவில்லை... இன்று என்னவள் வந்து விட்டாள்... மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறேன்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..1

மோகனன் said...

வாங்க சஙகர்..

வாழ்த்திற்கு மிக்க நன்றி... இச்சிந்தனை அத்தனையும் என்னவளால் வந்தது.. அவளுக்கே எல்லா பெருமையும் போய்ச் சேரும்..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!