ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday, October 20, 2009

வளைந்து கொடுக்கும் நாணலடி..!


தென்றாலாக வீசுவாய்
என காத்திருந்தேன்...
நீயோ கொடும் புயலாக வீசுகின்றாய்..!
நான் ஆலமரமல்ல பெண்ணே
உனை எதிர்த்து நின்று
அடியோடு வீழ்ந்து போவதற்கு..?
நான் வளைந்து கொடுக்கும் நாணலடி
உன் புயல் வீச்சிற்கு தகுந்தாற்போல்
தலையசைத்து உன் வருகையை
உவகையோடு ஏற்றுக் கொள்வேன்..!
அப்போதாவது என்காதலை
புரிந்து கொள்..!
4 comments:

சத்ரியன் said...

//நான் வளைந்து கொடுக்கும் நாணலடி//

தங்கம் , நீயும் கூட கொஞ்சம் வளைந்து கொடுக்கலாம்மா. பையனப் பாத்தா பாவமாத் தெரியுது.

மோகனன் said...

வளைஞ்சி கொடுத்துட்டாங்கன்னுதான் நினைக்கிறேன் சத்ரியன்...

இருந்தாலும் அந்த வீச்சு குறைய நிறைய நாட்களாகும் போலிருக்கிறது...

தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள் பலப்பல...


நன்றி மீண்டும் (சு)வாசிக்க வருக..!

Tamilparks said...

அருமை, தாங்கள் விரும்பினால் தங்கள் படைப்புகளை எமது தமிழ்த்தோட்டத்தில் வெளியிட ஆவலாக இருக்கிறோம்...

http://tamilparks.50webs.com

மோகனன் said...

தாராளமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் தோழரே...

தேமதுரத் தமிழோசையை உலகமெலாம் பரவச் செய்வதில் அடியவனும் பங்கேற்கிறேன் எனில் அது எனக்கு மகிழ்ச்சியே...

வருகைக்கும்..பின்னூட்டத்திற்கும் என்னுடைய பணிவான நன்றிகள் தோழரே...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!