ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Thursday, October 1, 2009

மதுமிதாவிற்கு வாழ்த்து..!

காலட்ச் மியுமுனைப் பெறவே - அவளிடத்
துஞ்சினாய் தூயவளே… கவிணேசக்  கவித்துவா
மின் மகளே சத்தியத்தின் வழி நிற்கும்
தானாதிபதியாய்  நூறாண்டு நீ வாழி..!


(எங்களது தோழியின் மகளான மதுமிதாவிற்கு இன்று 4வது பிறந்தநாள்... அச்சிறுமிக்காக நான் எழுதிய மரபுக்கவிதை (முயற்சி)... இதில் எதுகை, மோனை இருக்காது. ஆனால், சீர்கள் வெண்பாவிற்குரிய இலக்கணத்துடன் இருக்கும்...

இந்த பாடலின் ஒவ்வொரு வரியிலுள்ள முதல் எழுத்துக்களை மேலிருந்து கீழாகப் படித்தால்... பிறந்தாநாள் கொண்டாடும் சிறுமியின் பெயர் வரும்... இச்சிறுமியின் தாயின் பெயரை, இந்த பாடலின் ஒவ்வொரு வரியிலுள்ள இரண்டாவது எழுத்துக்களை மேலிருந்து கீழாகப் படித்துப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். இச்சிறுமியின் தந்தையார் பெயரான கணேசனுடைய பெயரும் இதில் அடங்கி இருக்கும்.

தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டவும்...)


கா மேரு பருவதமடா உன்றன் தாய்
துஞ்சினாய் அவள் வயிற்றில் மழலையாய்…
மிசல் கணக்கனின் கணக்குப்படி – பத்துத் திங்கள்
தானாகத் தனித்திருந்தாய்க் கருவறையில்..!

பிறப்பெடுத்தாய் பெண் மலராய் இப்புவியிலி
வாத நிலை பெறுவாய் என்கவியில்..!
ந்தியத் திருநாட்டில்  நீ ஒரு பூங்காற்று..!
மிழின் தலைமகளே நீ எங்கள் தாலாட்டு..!
நாமகளே… நீ பிறந்த இந்நாளில் என்றும் நலமேவ
ள்ளி மகன் வாழ்த்துகிறான்… வாழ்க நீ பன்னூறாண்டு..!

(அதே போன்றதுதான்..ஆனால் கொஞ்சம் வித்தியாசம்...)

4 comments:

ஜெரி ஈசானந்தா. said...

பிரமிக்கிறேன், தங்கள் ஈ-மெயில் முகவரி வேணுமே

Yeskay said...

arumai nanba. varigal nantru. thodarungal. vazhththukkal.
Natpudan KUMAR, AbuDhabi
Mudinthal Kirukkalkal Parkavum. Nanri

மோகனன் said...

நண்பர் ஜெரி ஈசானந்தா அவ்களுக்கு...

தங்களுடைய வருகைக்கும்... வைரம் போன்ற கருத்திற்கும் நன்றிகள் பற்பல...

எனது மின்னஞ்சல் முகவரி: moganan@gmail.com

தங்களுக்கும் கவிதைகள் தேவையெனில் அடியவனுக்கு கட்டளையிடுங்கள்... காற்றாய்ச் செய்து முடிக்கிறேன்...

நன்றி தோழரே..

என்றென்றும் அன்பு 'டன்'

மோகனன்

மோகனன் said...

அன்பிற் சிறந்த குமார நண்பா...

தின் வாழ்த்து எனக்கு உரமூட்டுகிறது...

நின் வருகைக்கும்..கருத்திற்கும் நன்றிகள்...

இதே பார்வையிடுகிறேன்...

என்றென்றும் அன்பு 'டன்'

மோகனன்